பினாமி சொத்து விவகாரம் : செந்தில் பாலாஜி உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்
பினாமி சொத்து விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் அனுராதா என்பவருக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நிலத்தை விற்ற அனுராதா என்ற பெண்ணிற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Comments