ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை -144 தடை உத்தரவு பிறப்பிப்பு

0 1820

ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை வெடித்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.

அந்த மாநிலத்தின் சம்பா மாவட்டம் பந்தல் கிராமத்தை சேர்ந்த மனோகர்லால் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்ததாகவும், அவரை சிறுமியின் உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து படுகொலை செய்து உடலை 8 பாகங்களாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஷரீப் முகமதுவின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.

தீ வைப்பு சம்பவத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் நடத்திய அவர், கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றுமாறு வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments