தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை கொடுத்த தாய்.. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழப்பு?...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தததாக அவரது தாய் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதியின் 8 வயது மகள் அகல்யா சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு தாகம் எனக்கூறிய அகல்யாவுக்கு தாய் தீபா படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் இருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்துக் கொடுத்துள்ளார்.
அதனைக் குடித்த சிறுமி உடனடியாக துப்பியதையடுத்து, அங்கிருந்த செவிலியர் அது ஸ்ப்ரிட் என்பதை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி அவசர வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்ததாகவும், சிறுமி முழுமையாக குடிக்காத நிலையிலும் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகவும் தாய் தீபா கூறியுள்ளார்.
Comments