சூடானில் 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் நோயாளிகள் அவதி..!
சூடானில் நடந்துவரும் உள்நாட்டு போரால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கு 8000 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டபடி உயிர் வாழ்ந்துவரும் நிலையில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் நடந்துவரும் அதிகார போரால் 60 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கடும் மின் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இயங்கிவரும் ஒரு சில மருத்துவமனைகளிலும் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்துவருகின்றனர்.
பிணவறைகளில் குளிர் சாதன பெட்டிகள் இயங்காமல் 450 சடலங்கள் அழுகத் தொடங்கியுள்ளன.
Comments