தென்கொரியா வந்தடைந்த அமெரிக்காவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்... வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நடவடிக்கை..!

0 2010

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, அமெரிக்காவின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியா வந்தடைந்துள்ளது.

உளவு செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சியில் தோல்வியை தழுவிய வடகொரியா, நேற்று மீண்டும் 2 குறுகிய தூர ஏவுகணை ஏவி பரிசோதித்தது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஜி.என் என்றழைக்கபடும் அணுசக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல், 6 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியாவின் புசான் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா - தென்கொரிய அதிபர்கள் ஒப்புக் கொண்டனர்.

அப்போது, வடகொரியாவின் தாக்குதலில் இருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் வண்ணம், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்படும் என அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments