மணிப்பூரில் மீண்டும் வன்முறை - மத்திய அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.
மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் மணிப்பூரில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஒரு கட்டத்தில், இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பேட்டோர் வீட்டை முற்றுகையிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகக வீட்டிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் போது மத்திய அமைச்சர் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments