போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து பலருக்கும் சப்ளை செய்த நபர் கைது... அடுத்தடுத்து சிக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல்...!
ஒரே மாதத்தில் இரண்டு போலி பாஸ்போர்ட் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலர் கடந்த பத்தாம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் இலங்கையை சேர்ந்த நிரோஷன் என்பவர் போலியாக இந்திய பாஸ்போர்ட்டும், இத்தாலி விசாவும் வைத்திருந்ததாகவும், இதன் மூலம் இத்தாலி செல்ல முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் நிரோஷனை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் மண்ணடியைச் சேர்ந்த சபிக் அகமது என்பவர் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடராஜன் என்பவர் மூலம் போலி ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.
ஏற்கனவே, சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக, கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ஷேக் இலியாஸ் மற்றும் சிவகுமார் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
Comments