போலி கணக்கு தொடர்பான வழக்கு : ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

0 1240

போலி கணக்கு தொடர்பான வழக்கில் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இந்தியாவில் ஃபேஸ்புக் செயலியை தடை செய்ய நேரிடும் என கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூருவைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் என்பவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்திய அரசு கொண்டு வந்த சிஏஏ மற்றும் என்.ஆர்.சி ஆகிய திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. பயந்துபோன ஷைலேஷ் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தனது ஃபேஸ்புக் கணக்கையும் அழித்துள்ளார்.

ஆனால் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கிய விஷமிகள், சவுதி அரேபிய அரசுக்கு எதிராக அவதூறு செய்தியை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷைலேஷை அந்நாட்டு அரசு கைது செய்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தனது கணவரை மீட்டுத் தரும்படி ஷைலேஷின் மனைவி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து போலி கணக்கு தொடங்கிய நபர் குறித்த அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments