பெரு தலைநகர் லிமா அருகே சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு..!
பெரு தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சான் மார்கோஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி, கிமு 1500 மற்றும் 1000-க்கு இடையே லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மம்மியின் தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின் எச்சங்கள் பருத்தி மூட்டையில் சுற்றப்பட்டிருந்ததை முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், பின்னர் எஞ்சிய பாகங்களை கண்டறிந்தனர். சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகளுடன் மம்மி புதைக்கப்பட்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments