அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரதரவென இழுத்துச் சென்றதில் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினார் - கண்ணதாசன்

0 3309

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை அதிகாரிகளால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாகவும், அதிகாரிகள் தன்னை தரதரவென இழுத்துச் சென்றதில் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் செந்தில் பாலாஜி கூறியதாக தெரிவித்தார்.

மேலும், செய்திகள் வெளியானதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக கூறிய கண்ணதாசன், செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments