ரயில் தண்டவாளத்தில் டயர்கள் போடப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது... தண்டவாளத்தை கடக்கும் போது அபராதம் விதித்ததால் ஆத்திரம்..!
திருச்சி வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தின் நடுவில் டயர்கள் போடப்பட்ட விவகாரத்தில் 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கார்த்திக் ராஜா, வெங்கடேசன் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது டாஸ்மாக் ஊழியரான வெங்கடேசன், பெரியார் தெருவில் சாலை போட ரயில்வே துறையினர் தடையாக இருந்து வருவதாலும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி அபராதம் விதிப்பதாலும், அவர்களை பழிவாங்க எண்ணி, மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து தண்டவாளத்தில் டயர்களை போட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments