'வார்னர் புரோஸ்' நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஹாரி பாட்டரின் மாயாஜால உலகை பிரதிபலிக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ...!

0 1471

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் மாயாஜால உலகத்தை மெய்பிப்பதைபோல் ஜப்பானில் பிரமாண்ட ஸ்டூடியோவை வார்னர் புரோஸ் (Warner Bros) நிறுவனம் அமைத்துள்ளது.

லண்டனில் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தால்  வடிவமைக்கப்பட்ட ஸ்டூடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததை அடுத்து, மேம்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை டோக்கியோவில் அமைத்துள்ளது.

ஆசிய அளவில் ஹாரி பாட்டர் ரசிகர்களை கவரும் விதமான இந்த ஸ்டூடியோ வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 3,700 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments