டாஸ்மாக் மது குடித்து இருவர் பலியான விவகாரம்: சொத்து தகராறில் மதுவில் சயனைடு கலந்தது அம்பலம்

0 3464

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் இருவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் சயனைடு கலந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் உயிரிழந்த பழனிகுருநாதனின் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடி கிராமத்தில் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இரண்டு பேர் டாஸ்மாக் மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இருவரது உடற்கூறு சோதனையில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பழனி குருநாதனின் சகோதரர்கள் மனோகர், பாஸ்கர் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் நடைபெற்ற விசாரணையில், சொத்து தகராறில் சயனைடு கொடுத்து இருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

குடும்ப சொத்து தகராறில் பழனி குருசாமி கொல்லப்பட்ட நிலையில், ஓசி மதுவுக்கு ஆசைப்பட்டு அவரது நண்பர் பூராசாமியும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments