ரயில் நிலையம் அருகே வெட்டு காயங்களுடன் ஆடை இல்லாமல் ஓடி வந்த பெண்.. மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வெட்டு காயங்களுடன் உடலில் ஆடை இல்லாமல் ஓடி வந்த பெண்ணை மீட்டு ரெயில்வே போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி வெட்டுக் காயங்களுடன் ரயில் நிலையம் நோக்கி ஓடிவந்துள்ளார்.
இதனைக் கண்ட ரயில்வே போலீசார் அவருக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அந்த பெண்ணுடன் வந்ததாகக் கூறப்படும் அர்ஜுன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
Comments