சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் நீர்மின் திட்ட பணிகளை தொடங்கும் இந்தியா....

0 4041

சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது.

அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் வழியாக செல்லும் பிரம்மபுத்திராவின் கிளை நதியில் கட்டப்பட்டுள்ள சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளின் சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் அலகில் வரும் டிசம்பர் இறுதிக்குள் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும் என்று திட்டத்தின் நிதி இயக்குனர் கோயல் தெரிவித்துள்ளார்.

2003-ல் தொடங்கப்பட்ட இந்த  2 ஜிகாவாட் மின்சார உற்பத்தி திட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் 20 ஆண்டுகள் தாமதமானதாக கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் என பதற்றமான எல்லைகளில் அமைந்துள்ள பெரிய அணைகள், உள்ளூர் பொருளாதாரங்களை உயர்த்த வழிவகை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

2 புள்ளி 9 ஜிகாவாட் நீர்மின்சாரம் உற்பத்திக்கான டிபாங் நீர்மின் திட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கோயல் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments