பொது கவுன்சிலிங் ஏற்புடையதல்ல.. மறு பரிசீலனை செய்து தற்போதைய நடைமுறையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

0 1861

பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய மருத்துவக் குழுமத்திடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளையும், அதிக மருத்துவ இடங்களையும் தமிழ்நாடு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். இடங்கள், 2021ஆம் ஆண்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களையும் சேர்த்து 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments