இந்திய உள்கட்டமைப்பு துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உறுதி
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது விரிவான பொருளாதார கூட்டு கூட்டத்திற்கு பின்னர் இரு நாடுகளின் அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் தற்போது 48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும், இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய உள்கட்டமைப்பு துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உறுதியளித்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் தனி பின் அகமது அல் செயோதி கூறினார்.
Comments