இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் முன்னாள் சி.இ.ஓ புகார் - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்ததை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜாக் டோர்சி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு மிரட்டியதாக கூறி இருந்தார்.
விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், டோர்சியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உளறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
Comments