கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ.15,000 தருவதாக ஆசைவார்த்தை... 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பல்

0 15782

கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது.

முல்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் ஸ்ரீசாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், திருவாரூரைச் சேர்ந்த அமானுல்லா 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனக்குத் தெரிந்த பலரையும் அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்ய வைத்துள்ளார்.

நான்கைந்து மாதங்கள் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கி வந்த அந்நிறுவனம், அண்மையில் கும்பகோணத்தில் இருந்த அலுவலகத்தினை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சி வணிகத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணமோசடி குறித்து தனித் தனியாகப் புகாரளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments