விலைவாசி உயர்வைத் தடுக்க கோதுமை கையிருப்பு வைப்பதற்கு வரம்பு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு
விலைவாசி உயர்வைத் தடுக்க கோதுமை கையிருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. கடந்த ஒருமாதத்தில் கோதுமை விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் பிரதான உணவாக உள்ள கோதுமையை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசுஅரசாணை பிறப்பித்துள்ளது. மொத்தக் கொள்முதல் வியாபாரிகள் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கையிருப்பில் வைக்கலாம் என்றும் சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் வைத்திருக்கலாம் என்றும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு உள்ள தடை நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது தவிர அரசு கிடங்குகளில் இருந்து 15 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments