மனிதர்கள் பயணிக்கக் கூடிய முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம்... மணிக்கு 50 கி.மீ வேகத்தில் 200 மீ உயரம் வரை பறக்கும்...!
சீனாவின் ஷென்செனில் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய வகையிலான முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டோனட் வடிவிலான பறக்கும் தட்டு நிலத்திலும், நீரிலும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார பறக்கும் தட்டு, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது.
12 புரொப்பலர் பிளேடுகள் அமைப்புடன் கூடிய இவ்வாகனம் 15 நிமிடங்கள் வரை செயல்படும்.
தற்போது சுற்றுலா, விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பயன்படும் இவ்வாகனம், பயணிகள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என தெரிவிக்கப்படவில்லை.
Comments