தேசிய அளவிலான பொது கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தேசிய அளவிலான பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் என்றார்.
அதிக அளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில் பொது கலந்தாய்வின் மூலம் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைத்துவிடும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Comments