கொடைக்கானல் அருகே 50 அடி ஆழ பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே சாலையில் காரை திருப்ப முயற்சி செய்த மெக்கானிக்கின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொடைக் கானல் கான்வென்ட் பகுதியில் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன், இவரும் இவரது நண்பரான கல்லுக்குழி பகுதியை சேர்ந்த விமல் ஆகிய இருவரும் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் மதுபான கூட த்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியேறிய மெக்கானிக் ஸ்கார்பியோ வாகனத்தில அமர்ந்து அதனை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Comments