மணிப்பூரில் இணைய சேவைகள் மீதான தடை வருகிற 15ஆம் தேதி பிற்பகல் வரை நீட்டிப்பு!
மணிப்பூரில் கடந்த 24 மணிநேரமாக வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையில் அமைதியை மீட்பதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மணிப்பூரில் இருவேறு இனக்குழுவினர் இடையே மோதல் வெடித்துபெரும் வன்முறையாக வளர்ந்த சூழலில் ராணுவத்தின் உதவியோடு கவவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி 350 அரசு காப்பகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளையும் போலி வீடியோக்களையும் பரப்புவதைத் தடுக்க 15ம் தேதி வரை இணைய சேவைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Comments