மோசமான வானிலை : பாக். வான் எல்லைக்குள் நுழைந்த இண்டிகோ விமானம்
மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்தது.
சனிக்கிழமையன்று அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், அட்டாரி வழியாக பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமிர்தசரஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் விமானம் அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இரவு 7.30 மணியளவில் வடக்கு லாகூரின் வான் பகுதிக்குள் சென்ற விமானம், இரவு 8 மணிக்கு இந்தியா திரும்பியது.
மோசமான வானிலையின்போது இது போன்று விமானங்கள் நுழைவது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதால், இது அசாதாரண நிகழ்வல்ல என பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments