அதி தீவிர புயலாக வலுப்பெற்றது பிபர்ஜோய்: இந்திய வானிலை மையம்
அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜோய், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் இடையே வருகிற 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான அந்த புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15ம் தேதி புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென்றும், ஆதலால் 15ம் தேதி வரை மீனவர்கள் யாரும் அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
Comments