கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை போலீசார் முன்னிலையில் தாக்க முயன்ற கொள்ளை கும்பல்...!
கன்னியாகுமரி அருகே கனிம வள கொள்ளை கும்பல் ஒன்று, நள்ளிரவில் லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை போலீசார் முன்னிலையிலேயே தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் சட்டவிரோதமாக லாரிகள் மூலம் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
அதில் பெரும்பாலான லாரிகள் கட்டமைப்புகளை மாற்றி உயரம் அதிகப்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து அதிக அளவில் கற்கள், ஜெல்லி, பாறை பொடி போன்ற கனிம வளங்கள் ஏற்றி செல்கின்றனர்.
அந்த லாரிகளால் விபத்துகள் நேரிடுவதால், சிராயன்குழி, உண்ணாமலைக்கடை கிராமத்து இளைஞர்கள், நேற்றிரவு கனிம வள லாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இளைஞர்கள் சாவியை பிடுங்கிக் கொண்டதால் ஆத்திரமடைந்த கனிம வள கொள்ளை கும்பல், லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு, போலீசார் முன்னிலையிலேயே இளைஞர்களை தாக்க முற்பட்டனர்.
தாக்குதலை தடுத்து நிறுத்திய போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி சாவியை பெற்றுக் கொடுத்து, கனிம வள கொள்ளை கும்பலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
Comments