வறண்ட நிலப் பகுதிகளில் விளையும் பேரிச்சை மரங்களை சாகுபடி செய்து அசத்தி வரும் விவசாயி....!
சவுதி அரேபியா போன்ற வறண்டநிலப் பகுதிகளில் விளையும் பேரிச்சை மரங்களை தருமபுரி மாவட்டம் அரியகுளத்தில் சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வருகிறார் விவசாயி ஒருவர்.
சவுதிஅரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த நிஜாமுதின், சோதனை அடிப்படையில் அங்கிருந்து சில பேரிச்சை மரக்கன்றுகளை சொந்த ஊருக்கு கொண்டு வந்து பயிரிட்டுள்ளார்.
சில ஆண்டுகளிலேயே அவை நல்ல விளைச்சல் கொடுக்கவே, பர்ரி, மஸ்தூர், அம்மர், சுல்த்தானா உள்ளிட்ட 32 வகையான பேரிச்சை செடிகளை இறக்குமதி செய்து சாகுபடி செய்துள்ளார்.
பேரிச்சை சாகுபடிக்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவையில்லை என்று கூறும் நிஜாமுதீன், ஆண்டுதோறும் கணிசமான லாபத்தை பெற முடிவதாகவும் தெரிவித்தார்.
Comments