மன்னன் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு ஒத்திகை.. வெயில் தாளாமல் 3 வீரர்கள் மயக்கம்..!

0 1417

லண்டனில் மன்னன் சார்லஸின் பிறந்தநாளின் போது நடக்க உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது வெயில் தாங்காமல் வீரர்கள் 3 பேர் மயங்கிச் சரிந்தனர்.

வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையை இளவரசர் வில்லியம் நேரில் பார்வையிட்டார். அப்போது வெயிலை தாக்குப்பிடிக்க இயலாத ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். மயங்கிய 2 பேர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர்.

கடும் வெயிலில் ஒத்திகையில் பங்கேற்ற அனைவருக்கும் இளவரசர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments