ஃப்ரீ ஃபையர் கேம் விளையாடி தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.36 லட்சத்தை காலிசெய்த சிறுவன்..!

0 2080

ஆன்லைன் விளையாட்டு மீதான மோகத்தால் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளான்...

அம்பேர்பேட் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது தாத்தாவின் செல்போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடியுள்ளான். கேமில் அடுத்தடுத்த லெவல் செல்வதற்கு ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக சிறிதுசிறிதாக முதலில் ஆயிரத்து 500 ரூபாய் என தொடங்கி பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலவழிக்க தொடங்கியுள்ளான்.இப்படி வீட்டுக்கே தெரியாமல் 36 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளான்.

தனது வங்கி கணக்கிலிருந்து பணம் குறைந்ததைத் தொடர்ந்து, தாய் வங்கிக்கு சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. அண்மையில், சீனாவில் ஆன்லைன் கேமில் 13 வயது சிறுமி தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 52 லட்ச ரூபாயை செலவழித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments