ஓடு பாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட இருநாட்டு விமானங்கள்

0 1648

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹானேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இது குறித்து ஜப்பான் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பாங்காக் புறப்படத் தயாராக இருந்த தாய் ஏர்வேஸ் விமானம்  தாய்பே நகருக்குச் செல்ல இருந்த இவா ஏர்வேஸ் விமானத்துடன் டாக்சி பாதை என்றழைக்கப்படும் ஓடுதளத்தில் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்ற போதும் ஏராளமான விமானங்கள் இதனால் தாமதம் ஆகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments