பொதுமக்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருட்டு.. மர்மநபரை சுற்றி வளைத்த போலீசார்..!

0 2404

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சந்தை நாட்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிப்பவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு போலி கார்டை கொடுத்து ஏமாற்றிவிட்டு ஒரிஜினல் கார்டு மூலம் பணத்தை திருடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் ரகசிய காமிரா மூலம் கண்காணிப்பு செய்ததில், பெண் ஒருவரை ஏமாற்றி கார்டை பெறுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மர்மநபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற அந்த நபரிடம் இருந்து18,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments