பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை சீற்றத்தால் 8,000 பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்சில் மாயோன் எரிமலை சாம்பலை உமிழ்ந்து வருவதால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வடகிழக்கு அல்பே மாகாணத்தில் எரிமலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பசிபிக் பகுதியில் இருந்து பிலிப்பைன்ஸை நோக்கி வரும் குச்சோல் சூறாவளி பெருமழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அல்பே மாகாணம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments