சாவிகளை கொடுக்க சொல்லுங்க.. ஆணையிட்ட எம்.எல்.ஏவிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி..! மண் கடத்தலுக்கு செக் வைத்தார்
பட்டுக்கோட்டை அருகே சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த நிலையில், வண்டிகளை விடுவிக்க கூறிய எம்.எல் ஏ அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி பாலாஜியின் ஆடியோ வெளியாகி உள்ளது.
பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் காலாவதியான ரசீதுகளை பயன்படுத்தி சிலர் மண் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த இடத்தில் இருந்த டிராக்டர் மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்து மண்கடத்தலை தடுத்து நிறுத்தினர்.
மண் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக பேசிய பட்டுக்கோட்டை எம். எல்.ஏ அண்ணாதுரை , தாசில்தார் வந்து பார்த்தவுடன் மண் அள்ளுவதை நிறுத்த சொல்லி விட்டதாகவும், தற்போது தாசில்தாரிடம் பேசி சரிகட்டி விட்டதாகவும், வண்டி சாவிகளை நம்ம பசங்ககிட்ட எஸ்.ஐ யை கொடுக்க சொல்லுங்க என்று பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி பாலாஜியிடம் கூறினார். அதற்கு அவர், 20 அடி முதல் 25 அடி ஆழம் வரைக்கும் அதிகமாக மண் அள்ளுறாங்க என்று சுட்டிக்காட்டினார்.
தாசில்தாரிடம் பேசிவிட்டேன், மண் எடுப்பதை தடுப்பதற்கு நீங்கள் அத்தாரிட்டி கிடையாது, தாசில்தார்தான் அத்தாரிட்டி என்று கூறியதோடு தான் சொல்வதை கேட்கும்படி எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆணையிட, கொஞ்சம் கூட தாமதிக்காமல் நீங்கள் சொல்வதை கேட்க முடியாது , வழக்கு போடுகிறோம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கெத்தாக கூறினார் டி.எஸ்.பி பாலாஜி
இயற்கை வளங்களை பாதுகாக்க துணை நிற்க வேண்டிய சட்ட மன்ற உறுப்பினரே, டி.எஸ்.பியை சட்டத்தை மீறச்சொல்லி அழுத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments