மாலுமிகள் 22 பேரை கத்தி முனையில் சிறைபிடித்த அகதிகள்... ஹெலிகாப்டர்களில் வந்து மீட்ட பாதுகாப்பு படையினர்

0 1516
மாலுமிகள் 22 பேரை கத்தி முனையில் சிறைபிடித்த அகதிகள்... ஹெலிகாப்டர்களில் வந்து மீட்ட பாதுகாப்பு படையினர்

ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட துருக்கி நாட்டு சரக்கு கப்பலை இத்தாலி பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர்.

சிரியா, ஆப்கான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 15 பேர் கும்பல், துருக்கியிலிருந்து பிரான்ஸ் சென்ற சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டனர்.

நடுக்கடலில் அவர்களை மாலுமிகள் கவனித்த போது, கத்தி முனையில் சிறை பிடித்தனர். சிசிடிவி-யில் இதனை கவனித்த கேப்டன், எஞ்சின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு துருக்கிக்கு தகவல் அளித்துள்ளார்.

துருக்கி அரசாங்கம் உதவி கோரியதன் பேரில் 2 ஹெலிகாப்டர்களில் விரைந்த இத்தாலி பாதுகாப்பு படையினர், அந்த கும்பலை கைது செய்து சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மாலுமிகளையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments