உக்ரைனின் ஒடெஸா நகரம் மீது ரஷ்ய படைகள் ட்ரோன் தாக்குதல்

0 1911

உக்ரைனின் ஒடெஸா நகரம் மீது அதிகாலை வேளை நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

3 குழந்தைகள் உள்பட 27 பேர் காயமடைந்தனர். ஈரானிடமிருந்து வாங்கப்பட்ட ஷகத் ட்ரோன்களை வீசி ரஷ்ய படைகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.

உக்ரைன் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 8 ட்ரோன்களில் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு மீது விழுந்ததால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

உள்ளே சிக்கிக்கொண்ட 12 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments