கொலம்பியாவில், வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் 5 வாரத் தேடலுக்குப் பின் மீட்பு

0 1935

கொலம்பியாவில், வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் 5 வாரத் தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மே ஒன்றாம் தேதி, சான் ஹோஸ் நகரம் நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் எந்திரக்கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. 2 விமானிகளும், ஒரு பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் 13, 9 மற்றும் 4 வயதிலான குழந்தைகள்,  ஒரு வயதே ஆன தங்கள் தம்பியை தூக்கிக்கொண்டு வனப்பகுதியில் உதவி தேடி அலையத் தொடங்கினர்.

பழங்குடி மக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன், இரவு பகலாக வனப்பகுதியை சல்லடையிட்ட ராணுவ வீரர்கள், 5 வாரத் தேடலுக்குப் பின் 4 குழந்தைகளையும் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை அனுப்பிவைத்தனர். அவர்கள் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments