பலகோடி ரூபாய் மோசடி புகார்: ஏஆர்டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது
பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகைக்கடை நடத்தி ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு வாரம் 3 ஆயிரம் வீதம் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக ஏ.ஆர்.டி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உரிமையாளர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்து விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரையும், ஏ.ஆர் மால் மற்றும் ஜூவல்லரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும், மோசடியாக பெற்ற பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர், வெளிநாட்டில் சொத்துக்கள் ஏதும் வாங்கப்பட்டுள்ளதா என்பன பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Comments