பாகிஸ்தான் அரசு பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!
நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
முந்தைய நிதி ஒதுக்கீட்டை விடவும் இது 15 சதவீதம் அதிகமாகும். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் இது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல என்று கூறினார்.
மிகுந்த பொறுப்போடு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்றும் அவர் உறுதியளித்தார்.பாகிஸ்தான் கடன்களுக்காக அதிக தொகையை செலுத்தி வரும் நிலையில் இரண்டாவது மிகப்பெரிய செலவாக பாதுகாப்புத் துறை பட்ஜெட் விளங்குகிறது.
Comments