ஹைதரபாத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற 'மீன் மருந்து திருவிழா'.. மீன்களை உயிரோடு விழுங்கிய மக்கள்
ஆஸ்துமா நோயாளிகளை உயிருள்ள மீன்களை விழுங்கச்செய்யும் மீன் மருந்து திருவிழா ஹைதரபாத்தில் நடைபெற்றது.
பாரம்பரியமிக்க பத்தினி குடும்பத்தினர், 177 ஆண்டுகளாக இந்த மீன் மருந்து திருவிழாவை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் 3 ஆண்டு இடைவெளிக்கு பின் நடைபெற்ற விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
மூலிகை மருந்து தடவப்பட்ட மீனை அவர்கள் விழுங்கவைக்கப்பட்டனர். உணவுக்குழாய் வழியாக துடித்தவாறே செல்லும் மீன் நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.
Comments