செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தற்போதைக்கு வேலை இழப்புக்குள் ஏற்பட வாய்ப்பில்லை - ராஜீவ் சந்திரசேகர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தற்போதைக்கு வேலை இழப்புக்குள் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக கூறிய அவர், ஏ.ஐ. மூலம் ஒரு சில செயல்களை சாத்தியப்படுத்த முடியுமே தவிர எதையும் பகுபாய்ந்து, மனிதர்களை போல் சிந்தித்து செயல்படும் நிலையை செயற்கை நுண்ணறிவு இன்னும் எட்டவில்லை என குறிப்பிட்டார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்ய அயல்நாட்டு நிறுவனங்கள் அஞ்சியதாகவும், அந்த நிலை பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுக்கால பாஜக அரசால் மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்ற்ம் ஏற்பட்டு வருவதாகவும் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
Comments