சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் ரோபோவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!

0 4489

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

இதற்காக புரோக்ராம் செய்யப்பட்ட அந்த ரோபோ, மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவைப் பார்த்து, அது என்ன ரெசிபி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது.

இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோட்டிடம் கொடுத்ததாகவும், அதனை படித்து, அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட், ஒன்பதாவதாக தானே ஒரு புதிய உணவை தயாரித்துக் கொடுத்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமைக்கும் செயல்முறையை 93 சதவீதம் சரியாக கண்டறியும் திறன் பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments