உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் - அமைச்சர் ஜெய்சங்கர்!

0 1576

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டெல்லி ஆர்யபட்டா கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினைகளும் வேறுபாடுகளும் இருப்பதாக கூறினார்.

தனிப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருப்பது இயற்கையே என்று குறிப்பிட்ட அவர், அதற்காக அன்னிய நாடுகளை இந்திய பிரச்சினைகளில் தலையிடுமாறு கோருவது மேலும் பெரிய பிரச்சினைகளைத் தான் கொண்டு வரும் என்றார்.

அந்த வகையில் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி வெளிநாடுகளில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments