அமைச்சர் வெயிட்டு அவருக்கே தெரியல... பாரம் தாங்காமல் மூழ்கிய படகு..! சக்திமானாக மாறிய போலீசார்

0 1845

தெலங்கானா மாநிலத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஆற்றில் பூ தூவி கொண்டாடிய அமைச்சர் ஒருவர் ஏறிய படகு பாரம் தாங்காமல் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கிய  நிலையில், அமைச்சர் ஆற்றில் குதித்து உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதன் 10ம் ஆண்டு விழாவை தெலங்கான அரசு 10 நாட்கள் தொடர் விழாவாக கொண்டாடி வருகிறது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரீம் நகர் சட்டமன்ற உறுப்பினரும், உணவு , குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான கங்குல கமலகர் என்பவர் அங்குள்ள மன்னேரு ஆற்றில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றில் ஏறி ஆற்றில் பூதூவும் திட்டத்துடன் அமைச்சர் கங்குல கமலகர் அந்த படகில் ஏறினார். அமைச்சர் அமர்வதற்காக அந்த படகில் பலகை ஒன்றை குறுக்காக போட்டு வைத்திருந்தனர். அமைச்சர் ஏறி அமர்ந்ததும் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்ந்த படகிற்குள் ஆற்று நீர் புகுந்தது

இதையடுத்து உஷாரான அமைச்சர் ஆற்றுக்குள் குதித்து தள்ளாடினார். அதற்குள்ளாக பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும், மெய்காவலர்களும் ஓடி வந்து அவரை கைதாங்கலாக பிடித்து காப்பாற்றினர்

அதற்குள்ளாக படகு ஓட்டி கண் முன்னே அவரது படகு முழுவதுமாக நீருக்குள் மூழ்கிப்போனது

ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்த அந்த படகில் 3 பேர் ஏறியதால் பாரம் தாங்காமல் நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை முன் கூட்டிய கவனிக்க தவறிய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனக்குறைவாலும், தனது எடையை உணராமல் படகில் ஏறி அமர்ந்த அமைச்சரின் மெத்தனத்தாலும் கொண்டாட்டம் தத்தளிப்பாக மாறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments