முதுமலை வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் புள்ளி மான்கள்.. தோகை விரித்தாடும் மயில்..
கோடை மழையால் பச்சை பசேலென காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வெவ்வேறு விலங்குகள் கூட்டம் கூட்டமாக உலவி வருகின்றன.
கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து முதுமலை நோக்கி வந்துள்ள காட்டு யானைகள் குட்டிகளுடன் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன.
மழையால் நன்றாக புல் முளைத்திருப்பதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்கின்றன. சுற்றுலா பயணிகள் செல்லும் சாலையோரங்களில் இந்த மான் கூட்டங்கள் சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.
ஆண் மயில்கள் தோகையை விரித்து நடனமாடுவதும் அவ்வழியாக செல்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விலங்குகள் ஒன்றை ஒன்று தொந்தரவு செய்யாமல் இணக்கமாக திரிந்து வருகின்றன.
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சுற்றுலா பயணிகள், முதுமலைக் காடுகள் வழியாக செல்லும் பயணிகள் விலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments