சரியான மகசூல் கொடுக்காத பருத்தி விதைகளை விற்பனை செய்து மோசடி.. 15 பேர் கைது
தெலுங்கானாவில், சரியான மகசூல் கொடுக்காத பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாரங்கலைச் சேர்ந்த அவர்கள், விவசாயிகளிடம் இருந்து பருத்தி விதிகளை நேரடியாக கொள்முதல் செய்து, பிரபல நிறுவனங்களின் பெயரில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த விதைகளை வாங்கி பயிரிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இக்கும்பல் பருத்தி விதைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால், வியாபாரிகள் அதிகளவில் வாங்கி ஏமாற்றமடைந்தது தெரியவந்தது.
இக்கும்பலிடம் இருந்து 2.5 கோடி மதிப்புள்ள முளைப்பு திறனற்ற விதை பாக்கெட்டுகள், 21 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Comments