27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டி

0 2082

2023-ம் ஆண்டுக்கான உலக அழகிக்போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக உலக அழகிக்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 71-வது உலக அழகி போட்டியான இதில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவித்தார். ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இப்போட்டி நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் எனக் கூறினார்.

இறுதியாக இந்தியாவில், 1996-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments