காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கனடா - இந்தியா உறவு பாதிப்படையும் : அமைச்சர் ஜெய்சங்கர்

0 2008

காலிஸ்தான் பிரிவினைவாத  சக்திகளின் செயல்பாடுகளால், இருதரப்பு உறவு பாதிக்கப்படுமென கனடாவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. 

இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் படுகொலை செய்த சம்பவம் போல உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி, டொரன்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் அண்மையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா தொடர்ந்து இடம் கொடுப்பது இருநாடுகளிடையேயான உறவுக்கு நல்லதல்ல என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments