தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 50 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்தியஅரசு அனுமதி..!
நடப்பாண்டில் நாடு முழுவதும 50 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 30 அரசு மற்றும் 20 தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
8 ஆயிரத்து 195 இளங்கலை இடங்கள் கூடுதலாக கிடைப்பதால், எம்.பிபிஎஸ் படிப்பில் மாணவர்சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதனிடயே, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, விதிமுறைகளைச் சரியாத பின்பற்றாத 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரங்கள் கடந்த இரண்டரை மாதங்களில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
Comments