சாலையில் பூசணிக்காயை உடைச்சிப் போட்டா விபத்து எப்படி குறையும் ஆபீசர்? ராஜதந்திரங்கள் வீணான தருணம்

0 2800

சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை வீசினால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கும் போக்குவரத்து போலீசாரே, விபத்துக்கள் குறைய வேண்டும் என்று திருநங்கை ஒருவரை வைத்து சாலைக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்கயை சாலையில் உடைத்துச்சென்றனர்.

யாருக்காக இவங்க திருஷ்டி சுத்துராங்கன்னு குழம்ப வேண்டாம்... இனி இந்த சாலையில் விபத்தே நிகழக்கூடாது என்பதற்காக.. சாலைக்குத்தான் இந்த திருஷ்டிப்பூஜை..!

அதெப்படி திருஷ்டி சுற்றினால் விபத்து நடக்காதா ? என்றெல்லாம் மூளை புடைக்க கேள்வி கேட்கக்கூடாது. காரணம், சுற்ற சொன்ன சுக்கிரன், இந்த போலீஸ் ஆபீசர் அய்யா தான்..!

மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஒரே நாளில் விபத்துகளில் இருவர் பலியானதையடுத்து அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியாக தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்து, உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியான வானகரம் சாலையில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி சுற்றி போட்டு உடைத்ததாக தெரிகிறது.

எங்கெல்லாம் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோ அங்கு சென்று பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழத்தை சுத்தி போடும் நிகழ்வை பொறுப்பாக செய்த போக்குவரத்து போலீசார், அந்த திருஷ்டி பூசணிக்காயை சாலையோரம் தள்ளிச்செல்லாமல் அப்படியே சாலையில் விட்டுச்சென்றனர்

குறிப்பாக திருஷ்டி பூசணிக்காயை சாலையில் உடைத்துப் போட்டுச்சென்றால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி வழுக்கி விழுந்து விடுவார்களே ? என்ற எந்த ஒரு முன் யோசனையும் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments